/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியில்லாத காட்டேஜ்க்கு 'சீல்'
/
அனுமதியில்லாத காட்டேஜ்க்கு 'சீல்'
ADDED : ஆக 02, 2024 05:57 AM

வால்பாறை:
சோலையாறு அணைப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறுடேம் இடது கரை. இங்கு கடந்த மாதம், 30ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக, மண் சரிந்து, பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து, காட்டேஜ் கட்டி, சுற்றுலா பயணியரை தங்க வைப்பதை, மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது கண்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, வால்பாறை தாசில்தார் சிவக்குமார், நகராட்சி கமிஷனர் விநாயகம் ஆகியோர் தலைமையில், சோலையாறுடேம், பன்னிமேடு ரோடு இடது கரைப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களை பூட்டி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.