/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.டி., ஊழியர்களுக்கான தொழிற்சங்க கிளை துவக்கம்
/
ஐ.டி., ஊழியர்களுக்கான தொழிற்சங்க கிளை துவக்கம்
ADDED : பிப் 24, 2025 11:14 PM
கோவை, ;; கோவை மாவட்டத்தில் யுனைட்- ஐ.டி., எம்ளாயீஸ் யூனியன் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தொழிற்சங்க கிளை துவங்கப்பட்டது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான யுனைட் என்ற பெயரில் சென்னையில் தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் இவ்வமைப்பின் கிளை துவங்கப்பட்டது. மாவட்ட கிளை அமைப்புக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் இந்திய தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கடந்த மாதம் சட்ட விரோதமாக மூடப்பட்ட ஆன்லைன் கல்வி குறித்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போராட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இழப்பீடு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பேரவையில் யுனைட் கோவை மாவட்ட தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக விக்னேஷ், பொருளாளராக கேசவன் உள்ளிட்ட, 18 பேர் கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் யுனைட் மாநில பொதுச் செயலாளர் அழகு நம்பி வெல்கின் பங்கேற்றார்.

