/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 11ல் மத்திய நிதி அமைச்சர் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை
/
கோவையில் 11ல் மத்திய நிதி அமைச்சர் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை
கோவையில் 11ல் மத்திய நிதி அமைச்சர் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை
கோவையில் 11ல் மத்திய நிதி அமைச்சர் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை
ADDED : செப் 06, 2024 04:38 AM

கோவை : கோவையில் வரும், 11 மற்றும், 12ம் தேதிகளில்,நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
வரும், 11ம் தேதி மாலை 5:30 மணி அளவில் அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடக்கிறது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.தொடர்ந்து 12 ம் தேதி காலை 10:00 மணி அளவில் ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடக்கிறது.
இதில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குகிறார். மேலும் மாலை பா.ஜ., கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில், 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர்.