/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரி' மத்திய இணையமைச்சர் முருகன் புகார்

ADDED : ஏப் 19, 2024 11:39 PM
அன்னூர்;ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக தேர்தல் அதிகாரி மீது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகார் தெரிவித்தார்.
அன்னூர் அருகே கெம்ப நாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளியில் ஓட்டு சாவடி செயல்பட்டது. இங்கு மூதாட்டி ஒருவர், தனது பேரனுடன் ஓட்டு போடுவதற்காக நேற்று வந்தார்.
அப்போது அவர், மூன்றாவது வரிசையில் உள்ள சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கூறியதாகவும், அவருக்கு உதவிய பெண் தேர்தல் அதிகாரி, முதலாவது எண்னை அழுத்தி விட்டதாகவும் பேரன் புகார் தெரிவித்தார்.
இத்தகவலறிந்து, பா.ஜ., மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர், ஓட்டு சாவடிக்குள் சென்று பெண் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, மத்திய இணை அமைச்சர் முருகன், ஓட்டு சாவடிக்கு வந்து பெண் அதிகாரியிடம் விசாரித்தார். அதிகாரி மறுத்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். வயதான மூதாட்டி வாக்களிக்க உதவி கோரிய போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும், என்றார்.
தகவல் அறிந்து தாசில்தார், மண்டல அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.,வினரை, கலைந்து போகச் செய்தனர்.