/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரை வீரன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
/
மதுரை வீரன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED : ஜூன் 12, 2024 11:36 PM
கோவை : கோவை பங்கஜாமில் சாலை தாமு நகரில் அமைந்துள்ளது, மதுரைவீரன் பட்டத்தரசியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் விழா நடத்துவது வழக்கம். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி ஊர்வலம் நடந்தது. மலர்மாலை அணிந்து, கைகளில் அக்னிச்சட்டி ஏந்திய பக்தர்கள், சுவாமியை போல் வேடமணிந்து, சக்திவேலால் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தனர்.
மேலும் சில பக்தர்கள், பால்குடங்களை தலையில் சுமந்து போற்றி மந்திரங்களை உச்சரித்தவாறு மேளதாளங்கள் முழங்க, கோவிலிலிருந்து புறப்பட்டனர்.
ராமநாதபுரம் சந்திப்பு, பங்கஜாமில் சாலை, முந்திவிநாயகர் கோவில் சந்திப்புகளை கடந்து, தாமு நகரிலுள்ள மதுரைவீரன் பட்டத்தரசியம்மன் கோவிலை, அக்னிச்சட்டி ஊர்வலம் அடைந்தது. மதியம் சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

