/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஜூன் 24, 2024 10:25 PM
கோவில்பாளையம்:கொண்டையம்பாளையம் ஊராட்சியில், சரியாக சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொண்டையம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கொண்டையம்பாளையம், கோட்டைப்பாளையம், வரதையம் பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.அத்திக்கடவு திட்டத்தில் இங்கு வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுக்குழாய்களிலும் அத்திக்கடவு நீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் கூறுகையில், 'வீட்டுக்கு சப்ளை ஆகும் குடிநீர் சேறு கலந்து வருகிறது. பிடித்து வைத்த சில நாட்களிலேயே புழு உருவாகி விடுகிறது. ஒரு வித வாசம் அடிக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திலும் பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். சுத்திகரிக்கப்படாமல் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடித்தால் போர்வெல் நீர் போல் உள்ளது,' என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,' ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும் இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,' என்றார்.