/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்படுத்தாத தள்ளுவண்டிகளை இரு நாட்களுக்குள் அகற்றணும்! நகராட்சி அதிகாரிகள் தகவல்

ADDED : செப் 02, 2024 02:10 AM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி நகராட்சியில் பயன்படுத்தாத தள்ளுவண்டி கடைகளை, இரண்டு நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்,' என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில், சாலையோர வியாபாரிகள், குப்பையை சேகரித்து யாரிடம் எப்போது கொடுப்பது என கேட்டனர். அதற்கு கமிஷனர், 'உரிய வகையில் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், குப்பையை எங்கே கொடுப்பது என்ற விபரங்களை அறிந்து கொள்ள துாய்மை பணி மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'சாலையோர வியாபாரிகள், குப்பையை தெருவில் வீசாமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பையை சேகரித்து, எங்கே வழங்குவது உள்ளிட்ட விபரங்களை துாய்மை பணி மேற்பார்வையாளர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
சத்யராஜ், 97868 24301, டி.முருகேசன், 86673 23132, சுப்ரமணி, 90035 06946, முருகேசன், 97888 14655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், நகராட்சியில் பயன்படுத்தாமல் உள்ள கடைகள், தள்ளுவண்டிகளை இரண்டு நாட்களுக்குள் உரிமையாளர்கள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நகராட்சி வாயிலாக அகற்றப்படும்,' என்றனர்.