/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் சிறப்பு துாய்மை பணி : 'எமிஸ்' தளத்தில் விபரம் பதிவேற்றம்
/
அரசு பள்ளிகளில் சிறப்பு துாய்மை பணி : 'எமிஸ்' தளத்தில் விபரம் பதிவேற்றம்
அரசு பள்ளிகளில் சிறப்பு துாய்மை பணி : 'எமிஸ்' தளத்தில் விபரம் பதிவேற்றம்
அரசு பள்ளிகளில் சிறப்பு துாய்மை பணி : 'எமிஸ்' தளத்தில் விபரம் பதிவேற்றம்
ADDED : ஜூன் 06, 2024 11:26 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தின் கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தன் சுத்தம், பள்ளி வளாக துாய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்முதல், மறுசுழற்சி முறைகளில் முக்கியத்துவத்தை உணர்தல்.
நெகிழி பயன்பாட்டை குறைத்து, இயற்கைக்கு உகந்த மாற்று பொருளை பயன்படுத்துதல், காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்பபடுத்த, 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், சிறப்பு துாய்மை பணிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த, 3ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு இச்சிறப்பு துாய்மை பணிகள், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தில், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைத் துாய்மை, ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள, தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை அகற்றம் செய்யப்பட்டது.
புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் என, பல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு, அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான பள்ளிகளில் துாய்மைப் பணி நிறைவடைந்துள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள், அதற்கான விபரங்களை போட்டோ எடுத்து, 'எமிஸ்' தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.