/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் தாலுகாவில் புதிய நீதிமன்றம் தாமதிக்காமல் திறக்க வலியுறுத்தல்
/
பேரூர் தாலுகாவில் புதிய நீதிமன்றம் தாமதிக்காமல் திறக்க வலியுறுத்தல்
பேரூர் தாலுகாவில் புதிய நீதிமன்றம் தாமதிக்காமல் திறக்க வலியுறுத்தல்
பேரூர் தாலுகாவில் புதிய நீதிமன்றம் தாமதிக்காமல் திறக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 24, 2025 11:20 PM
கோவை; பேரூர் தாலுகாவில் புதிய நீதிமன்றம் செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஐந்தாண்டுக்கு மேலாகியும் திறக்காமல் தாமதம் ஆகிறது.
கோவை மாவட்ட புற நகர் பகுதிகளில், தாலுகாவை மையமாக கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் இல்லாத, அன்னுார் மற்றும் பேரூர் தாலுகாவை தலைமையிடமாக கொண்டு புதிய மாஜிஸ்திரேட் கோர்ட் கம் முன்சிப் கோர்ட் திறக்க, ஐந்து ஆண்டுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அன்னுார் தாலுகாவில், 2023, மார்ச்சில், மாஜிஸ்திரேட் கம் முன்சிப் கோர்ட் திறக்கப்பட்டது.
பேரூர் தாலுகாவில் கோர்ட் கட்டுவதற்கு, மாதம்பட்டியில் அரசு புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கோர்ட் கட்டடம் கட்ட காலதாமதம் ஏற்படும் என்பதால், தற்காலிகமாக கோர்ட் செயல்பட இடம் தேடினர்.தொண்டாமுத்துார் பழைய ஒன்றிய அலுவலக கட்டடத்தை ஒதுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை மற்றும் நீதித்துறை நிர்வாகம் சார்பில், கட்டடத்தை நேரில் பார்வையிட்டனர்.
ஒன்றிய அலுவலகத்தை புனரமைக்க, ஒரு கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேலாகியும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், பேரூர் தாலுகா கோர்ட் திறப்பதில், தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பேரூர் தாலுகா, தேவராய புரம் வக்கீல் எஸ்.சுரேஷ்குமார் கூறியதாவது:
பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், தொண்டாமுத்துார், வடவள்ளி, காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், குனியமுத்துார், பேரூர் அனைத்து மகளிர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகள், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்களில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.
வழக்கில் ஆஜராக, வக்கீல்கள், போலீசார், பொதுமக்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தாமதிக்காமல், பேரூர் தாலுகாவில் புதிய கோர்ட் திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வக்கீல் சுரேஷ்குமார் கூறினார்.

