/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
/
கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 10:27 PM
உடுமலை : பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய்தடுப்பு நடவடிக்கையாக, கபசுர குடிநீர் வழங்குவதற்கு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை தொடர்ந்து மாற்றத்தில் இருப்பதால், பள்ளி செல்லும்மாணவர்கள் காய்ச்சல் தொற்றுக்கு அதிகம்ஆளாகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், நோய்த்தொற்று காரணமாக, அடிக்கடி மாணவர்கள் விடுப்பு எடுப்பதாகவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒரு மாணவர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவுடன், தொடர்ந்து அடுத்தடுத்த மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்களும் வேறுவழியின்றி மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாப்பதற்கு விடுப்பு அளிக்கின்றனர்.
தற்போதைய பருவநிலையில், காற்றும், மழையும், வெப்பமுமாக இருப்பதால் மாணவர்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கான நோய்தடுப்பு முகாம்கள், பள்ளிகளில் நடத்தப்பட வேண்டியதும் அவசியமாகியுள்ளது.
மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையிலும், தொற்றுகள் பரவாமல் தடுப்பதற்கும், பள்ளிகளில் மீண்டும் கபசுரம் அல்லது நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம்கள், தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.