/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திரவ வடிவில் யூரியா பயன்பாடு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
திரவ வடிவில் யூரியா பயன்பாடு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
திரவ வடிவில் யூரியா பயன்பாடு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
திரவ வடிவில் யூரியா பயன்பாடு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 01, 2024 10:30 PM
உடுமலை : யூரியா பயன்பாட்டை குறைக்கும் வகையில், திரவ வடிவிலான 'நானோ' யூரியாவை பயன்படுத்தலாம் என, வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.
அனைத்து விவசாய சாகுபடிகளிலும், பயிர்கள் வளர்ச்சிக்கு, யூரியா அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த உரத்தை இடும் போது, 30-35 சதவீத சத்து மட்டுமே பயிருக்கு பயன்படுகிறது.
மீதமுள்ள சத்து ஆவியாகி வீணாகிறது. எனவே, தமிழ்நாடு வேளாண் பல்கலை., யால், சத்துகள் வீணாகாமல், உரத்தை பயன்படுத்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பயிர்களுக்கு, இலை வழியாக 'நானோ' திரவ யூரியாவை தெளிக்கும் முறை குறித்து பரிசோதனைகள் மேற்கொண்டனர். முடிவுகள் அடிப்படையில், வேளாண்துறை வாயிலாக நானோ யூரியா பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
'ஒரு மூட்டை யூரியாவை மண்ணில் இடுவதற்கு பதில், அரை லிட்டர் நானோ யூரியா திரவம் அளித்தால் போதுமானது. இதன் வாயிலாக அதிகப்படியான வேதி உரங்கள் பயன்பாட்டை குறைத்து, மண் வளம் காக்கப்படுகிறது.
மேலும், பயிர் வளர்ச்சி சீராக இருப்பதுடன், மகசூல் அதிகரிக்கிறது,' என வேளாண்துறையினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வகையிலான திரவ யூரியாவை, ட்ரோன் வாயிலாகவும், பயிர்களுக்கு எளிதாக தெளிக்க முடியும். குறிப்பாக, நெற்பயிர்களுக்கு குறைந்த செலவில், தொழிலாளர் இல்லாமல், மருந்து தெளிக்க இந்த புதிய தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.