/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரம் கிடக்கும் பயனற்ற மின்கம்பங்கள்
/
ரோட்டோரம் கிடக்கும் பயனற்ற மின்கம்பங்கள்
ADDED : மார் 02, 2025 11:19 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில், ரோட்டின் ஓரத்தில் கிடக்கும் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதி கிராமப்புறத்தில் இருக்கும் மின்கம்பங்கள் பழுதடைந்தால், மின்வாரியம் சார்பில் புதிய மின் கம்பம் நடப்படுகிறது. ஆனால், அந்தப் பழுதடைந்த மின் கம்பத்தை முறையாக அகற்றாமல் ரோட்டின் ஓரத்தில் கிடப்பில் போடப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் அதிகளவு செடி கொடிகள் முளைத்து காணப்படுகிறது. மேலும், அங்கங்கே குப்பையும் கொட்டப்படுகிறது.
மேலும், ரோட்டோரம் கிடக்கும் மின் கம்பத்தின் கீழே, விஷப்பூச்சிகள் இருக்க வாய்ப்பு இருப்பதால், தூய்மை பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மின் கம்பம் மாற்றப்பட்டால், பழைய கம்பத்தை உடனடியாக அகற்ற, மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.