ADDED : பிப் 26, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கையன்புதூரில் உள்ள தனியார் லே-அவுட்டில், ராஜ கணபதி வள்ளி கும்மி கலைக்குழு சார்பில், 8வது அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமி வழிபாட்டுடன், கும்மி நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ஞானபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் கோபால் மற்றும் ஆயிரக்கணக்கான வள்ளி கும்மி கலைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

