/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளி கும்மி அரங்கேற்றம் 200 கலைஞர்கள் பங்கேற்பு
/
வள்ளி கும்மி அரங்கேற்றம் 200 கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 23, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, காராள வம்சம் கலைச்சங்கம் சார்பில், 50வது வள்ளி கும்மி அரங்கேற்ற பெருவிழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற பெருவிழா நடந்தது. பாரம்பரிய கலைஞர் சிவக்குமார், காராள வம்ச கலைச்சங்கத்தின் ஸ்ரீ அகத்துார் அம்மன் கலைக்குழுவின், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி அரங்கேற்ற பெருவிழா நடந்தது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.