/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி
/
வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி
ADDED : மே 01, 2024 12:19 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 14ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 23ம் தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டி ஆகியவற்றை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
29ம் தேதி இரவு, ஜடையம்பாளையம் முருகையன் தலைமையில், பஜனை குழுவினரின் வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இரவு ரூபாய் நோட்டு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.