/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீட்ரூட்டில் மதிப்பு கூட்டு பொருட்கள்
/
பீட்ரூட்டில் மதிப்பு கூட்டு பொருட்கள்
ADDED : ஜூலை 19, 2024 01:35 AM
உடுமலை;பீட்ரூட்டில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வை தோட்டக்கலைத்துறையினர் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை கணபதிபாளையம், மொடக்குப்பட்டி, தளி, ராகல்பாவி, போடிபட்டி, வாளவாடி, வல்லக்குண்டாபுரம், அய்யம்பாளையம், கொங்கல்நகரம் உட்பட பகுதிகளில், பரவலாக, பீட்ரூட் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பகுதியில், நிலவும் சீதோஷ்ண நிலை, களிமண் வளம், சொட்டு நீர் பாசன முறை ஆகிய காரணங்களால், பீட்ரூட் விளைச்சல் பிற பகுதிகளை விட அதிகம் உள்ளது. ஏக்கருக்கு, 7 கிலோ விதைகள் வீதம் நடவு செய்யப்பட்டு, 14 டன் வரை விளைச்சல் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால், பீட்ரூட் காய்களுக்கு, போதிய விலை கிடைக்காமல், 90 நாட்கள் சாகுபடிக்கு செய்த செலவு கூட கிடைக்காமல், விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பீட்ரூட் காய் மற்றும் அதன் இலைகள் மருத்துவ குணம் மிக்கதாகும்.
இவற்றை, மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான, பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை அளித்தால், உடுமலை பகுதி காய்கறி உற்பத்தியாளர்கள் மிகுந்த பயன்பெறுவார்கள்.