/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால சுவரில் வேன் மோதி விபத்து
/
மேம்பால சுவரில் வேன் மோதி விபத்து
ADDED : ஏப் 29, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை, நல்லாம் பாளையத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர், 17 பேர் வாடகை வேனில் நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.
வேனை ஜெகநாதன், 30, என்பவர் ஓட்டினார். நள்ளிரவு 12:45 மணிக்கு வேன் திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக, வேன் நிலை தடுமாறி மேம்பால சுவரில் மோதி நின்றது. பயணிகள் காயமின்றி தப்பினர். வேன் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து இருந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். கிழக்கு போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.

