/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேன் ஸ்டாண்ட்களை இடமாற்றணும்! திருவள்ளுவர் திடல் பகுதி மக்கள் மனு
/
வேன் ஸ்டாண்ட்களை இடமாற்றணும்! திருவள்ளுவர் திடல் பகுதி மக்கள் மனு
வேன் ஸ்டாண்ட்களை இடமாற்றணும்! திருவள்ளுவர் திடல் பகுதி மக்கள் மனு
வேன் ஸ்டாண்ட்களை இடமாற்றணும்! திருவள்ளுவர் திடல் பகுதி மக்கள் மனு
ADDED : செப் 17, 2024 04:44 AM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், வேன் ஸ்டாண்ட்களை இடமாற்றம் செய்ய வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் ரவுண்டானா அமைக்கவும், மார்க்கெட் ரோடு சந்திப்பு விரிவாக்கம் செய்யவும், சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, திருவள்ளுவர் திடலில், ரவுண்டானா அமைத்தல், ரோட்டின் இருபுறமும் ஒன்பது மீட்டர் அகலப்படுத்தி ரோடு உள்ளிட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பகுதியும், ஆட்டோ ஸ்டாண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், சரக்கு வாகனங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, திருவள்ளுவர் திடல் பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளுவர் திடலில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, வேன் ஸ்டாண்ட்கள் மீண்டும் அதே இடத்தில் அமைவதால் மிகப்பெரிய இடையூறாக உள்ளது.
வீடுகள், கடைகளுக்கு அருகாமையிலேயே வேன்கள், சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், மது அருந்துபவர்கள், சூதாட்டம், சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெண்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர்.
மாணவ, மாணவியர் பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ வர இடையூறாக உள்ளது. எனவே, வேன்களை அருகில் உள்ள லாரிப்பேட்டை பகுதியிலோ அல்லது மாற்று இடத்தில் நிறுத்தி வைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

