/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வி.ஏ.ஓ., தற்கொலை இருவர் மீது வழக்கு
/
வி.ஏ.ஓ., தற்கொலை இருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2024 01:59 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கூளநாயக்கன்பட்டி பனைமரத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி, 38. இவர், திருப்பூர் மாவட்டம், உடுமலை கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். கடந்த, 23ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், தன் சாவுக்கு யார் காரணம் என எழுதிய கடிதம் உறவினர்களிடம் சிக்கியது. அதில், 'தன் சாவுக்கு கிராம உதவியாளர் சித்ரா, 'மக்கள் மித்ரன்' பத்திரிக்கை ஆசிரியர் என உலா வரும் மணியன் ஆகிய இருவரும் தான் பொறுப்பு என எழுதியிருந்தார்.
அதன்படி, தற்கொலை வழக்கை மாற்றி, கிராம உதவியாளர் சித்ரா, மணியன் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் தேடுகின்றனர். இதற்கிடையே, சித்ராவை தற்காலிக பணி நீக்கம் செய்து, தாசில்தார் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

