/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ADDED : ஆக 20, 2024 01:50 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு பாளையம் கிராமத்தில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் அறிவரசு தொடங்கி வைத்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவலிங்கம் தலைமையில் மருத்துவர்கள் சீதா, பகீரதி, சரண்யா, ராதாமணி, அஸ்வினி, மதுரை கண் மருத்துவமனை, கே.ஆர். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
முகாமில், பொது மருத்துவம், மகப்பேறு, கண், ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.