/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரூதினி ஏகாதசி சிறப்பு வழிபாடு
/
வரூதினி ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED : ஜூன் 03, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;வைகாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி உற்சவம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்தது.
வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி 'வரூதினி ஏகாதசி'. அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்களைப் போக்கி, சகல செல்வங்களையும் அருளக் கூடிய நாள்.
பெரியகடைவீதியிலுள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.