/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா
/
ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா
ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா
ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா
ADDED : ஆக 14, 2024 09:27 PM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில், 114வது வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி, உலக அமைதி தின விழா நடந்தது.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் வரவேற்றார். சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தார்.
ஆழியாறு அறிவுத்திருக்கோவில் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், 'அமைதிக்கு மனவளக்கலை' என்ற தலைப்பில் காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் பேசியதாவது: இந்த உலகம் முழுவதும் போரின்றி அமைதி காண வேண்டும். இன்பம் என்ற ஒன்றை நாடி தான் அனைத்து உயிரினங்களும் செல்கிறது. அது எங்கு கிடைக்கும்; அதற்கு அமைதி ஒன்றே வழியாகும். கேள்வி கேட்பதால் தான் அறிவு கதவு திறக்கும்.சிந்தனை, சொல், செயலை இயக்க கூடியது மனமாகும். மனதில் உள்ள கெட்டதை வெளியேற்றி நல்லதை நினை, நல்லதை கேள், யோசி, அதையே செயல்படுத்த வேண்டும்.
உலக அமைதிக்காக மகரிஷி, சில கோட்பாடுகளை ஐ.நா., சபைக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை செயல்படுத்தி இருந்தால், நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது.
தற்போது, ஐ.நா., சபையில் அனைத்து நாடுகளும் இல்லை; அனைத்து நாடுகளும் ஐ.நா., சபையில் இடம் பெற வேண்டும் என, முதலவாதாக அவர் பரிந்துரை செய்தார்.
உலகம் அமைதி பெற வேண்டும் என்றால், அனைவரும் அமைதியை அடைய வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் அமைதி அடைந்தால், மனம் வளப்படும். மனம் வளப்பட்டால் குடும்பம், சமுதாயம், நாடு வளப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி நன்றி கூறினார்.