/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி சாகுபடி தொழில்நுட்ப முகாம்
/
காய்கறி சாகுபடி தொழில்நுட்ப முகாம்
ADDED : ஜூன் 27, 2024 09:48 PM

உடுமலை : குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த சிறப்பு முகாம் பொன்னேரி கிராமத்தில் நடந்தது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில் பொன்னேரி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அக்கிராமத்தில், வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்து பேசினார்.
பருவமழை காலத்தில், தென்னையில் உர நிர்வாகம் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஞானசேகரன், காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவானந்தன் விளக்கமளித்தனர்.
மானிய திட்டங்கள் தேவைப்படும் விவசாயிகள் பட்டியல் பெறப்பட்டு, உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் உள்ளிட்ட குழுவினரால் பதிவு செய்யப்பட்டது.
முகாமில், கால்நடைத்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்களும் பங்கேற்று திட்ட விளக்கமளித்தனர். முகாம் ஏற்பாடுகளை, உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் செய்திருந்தார்.