ADDED : பிப் 25, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் ஒன்றியம் பீடம் பள்ளி ஊராட்சியில் மயானம் உள்ளது.
இங்கு நேற்று இரவு, குப்பை மற்றும் கழிவுகளை கொட்டிய வாகனத்தை, ஊராட்சி செயலர் ரவிக்குமார் பறிமுதல் செய்தார். விசாரணையில் அதே பகுதியில் செயல்படும் பர்னிச்சர் நிறுவனத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, ரூபாய் 10 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

