தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரம் விழுந்து வாகனங்கள் சேதம்

மரம் விழுந்து வாகனங்கள் சேதம்

மரம் விழுந்து வாகனங்கள் சேதம்


ADDED : மே 06, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் இருந்த மரம் விழுந்ததில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமாகின.

கோவை --– மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையம் அருகே மீனாட்சி பஸ் நிறுத்தம் பகுதியில், சாலையோரம் இருந்த மிகவும் பழமையான வேப்பமரம் திடீரென சரிந்து விழுந்தது. சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம், மழையில் தாக்கம் போன்ற காரணத்தினால், நேற்று மரம் வேரோடு சாய்ந்தது.

இதில் மரத்துக்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமாயின. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. போலீசார், தீயைப்பு துறையினர் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர்.

----

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us