/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை ரோட்டில் வாகனங்கள்; ஆக்கிரமிப்பால் பாதிப்பு!
/
அரசு மருத்துவமனை ரோட்டில் வாகனங்கள்; ஆக்கிரமிப்பால் பாதிப்பு!
அரசு மருத்துவமனை ரோட்டில் வாகனங்கள்; ஆக்கிரமிப்பால் பாதிப்பு!
அரசு மருத்துவமனை ரோட்டில் வாகனங்கள்; ஆக்கிரமிப்பால் பாதிப்பு!
ADDED : மே 14, 2024 12:47 AM

கால்வாயை துார்வாருங்க!
உடுமலை ஸ்ரீ நகர் நகராட்சி பூங்கா முன் கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்துக்கொள்கிறது. எனவே, நகராட்சியினர் இக்கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவசாமி, உடுமலை.
பணிகளை முடிக்கணும்
உடுமலை - பழநி ரோட்டில், ஸ்ரீ நகர் சந்திப்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் பணி முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பால பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்பிரமணி, உடுமலை.
விபத்து அபாயம்
உடுமலை, சீனிவாசா வீதியில் பாதாளச்சாக்கடை குழியின் மூடி சிதிலமடைந்து உள்வாங்கி உள்ளது. அதன் மீது செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் ஒதுங்கிச்செல்வதற்கும் வழியில்லாமல், இடையூறு ஏற்படுகிறது.
- மணிமேகலை, உடுமலை.
போக்குவரத்துக்கு இடையூறு
உடுமலை, அரசு மருத்துவமனை ரோட்டில் கனரக வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அவ்வழியாக மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
- கண்ணன், உடுமலை.
வீணாகும் தண்ணீர்
பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு குஞ்சிபாளையம் அருகே ரோட்டில், தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தண்ணீர் கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- -சந்துரு, ஆனைமலை.
'லொள்' தொல்லை
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் எஸ்.வி., புரம் பகுதியில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில், அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தெருநாய்கள் அச்சுறுத்தி துரத்தி வருகின்றன. மேலும், ரோடுகளில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை இழுத்து, வீடுகளில் முன்பு பரப்பி விடுவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
- வேல்குமார், கணக்கம்பாளையம்.
திருட்டு பயம்
உடுமலை, பழனியாண்டவர் நகரில் சில பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் அப்பகுதியில் திருட்டு பயம் அதிகரிக்கிறது. பொதுமக்கள் இரவு நேரத்தில் ரோட்டில் நடந்து செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். எனவே, தெருவிளக்குகளை எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேந்திரன், உடுமலை.
கால்வாய் அடைப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை, லட்சுமி நாராயணா தெருவில், ஆஞ்சிநேயர் கோவில் அருகில் கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் அடைத்து நிற்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் நலன் கருதி கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -நாகராஜன், ஆனைமலை.
'பார்க்கிங்' பகுதியான ரோடு
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாப்பில், பிற வாகனங்கள் ரோட்டில் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டிய பஸ், சிறிது தூரம் தள்ளி நிற்கிறது. இதனால், பயணியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பஸ் ஸ்டாப் அருகே வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -தமையந்தி, பொள்ளாச்சி.
ரோட்டில் மண்
வடசித்தூர் - நெகமம் செல்லும் ரோட்டில் உள்ள வேகத்தடைகளில் பெரும்பாலானவைகளில் மண் தேங்கியுள்ளது. மழை பெய்ததால், ரோடு முழுக்க மண் பரவியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
-- -தங்கராஜ், நெகமம்.
ரோடு அமைக்கப்படுமா?
கிணத்துக்கடவு, 4வது வார்டுக்கு உட்பட்ட தேரோடும் வீதியில் முறையான ரோடு வசதி இல்லை. இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமப்படுகின்றனர். மேலும், மழை நேரத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே, பேரூராட்சி சார்பில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -செல்வராஜ், கிணத்துக்கடவு.