/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலை; வதந்திகளை பரப்பாதீர்: இந்து முன்னணி வலியுறுத்தல்

ADDED : மே 29, 2024 12:57 AM
கோவை;இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடந்தது.
இதில், மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் பேசியதாவது:
யானை வழித்தடம் என்ற பெயரில், ஹிந்து கோவில்களை குறிவைக்கும் போக்கை கைவிட வேண்டும்.
மருதமலை, பூண்டி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட கோவில்களுக்கு யானை வழித்தட வரைவு அறிக்கையால் சிக்கல் ஏற்படும்; பக்தர்கள் பாதிக்கப்படுவர். கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய வரைவை உருவாக்க வேண்டும்.
பூண்டி வெள்ளியங்கிரி மலையில், இம்மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம்.
ஆனால், பக்தர்களை அனுமதிப்பதில்லை என்ற பொய்ச் செய்தியை பரப்புகின்றனர். இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சத்ரபதி சிவாஜி முடிசூட்டிக் கொண்ட நாளில், கோவையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் விழா நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோட்டச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உட்பட மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.