ADDED : பிப் 15, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 27ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். உயிரிழந்தவர்களின் நினைவாக, நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பசு பாதுகாப்பு அமைப்பாளர் சதீஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவ சேனா அமைப்பின் சார்பிலும், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. சிவ சேனா மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். கேரள மாநில தலைவர் சஜீதிருத்திகுன்னில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

