/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைக்கோவில்களில் மருத்துவ குழு நியமிக்க வி.ெஹச்.பி.,கோரிக்கை
/
மலைக்கோவில்களில் மருத்துவ குழு நியமிக்க வி.ெஹச்.பி.,கோரிக்கை
மலைக்கோவில்களில் மருத்துவ குழு நியமிக்க வி.ெஹச்.பி.,கோரிக்கை
மலைக்கோவில்களில் மருத்துவ குழு நியமிக்க வி.ெஹச்.பி.,கோரிக்கை
ADDED : மே 10, 2024 01:34 AM
கோவை:தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயற்குழு கூட்டம், கோவை அலுவலகத்தில் நடந்தது. கோட்ட கொள்கை பரப்பு செயலாளர் லாலா மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநகர மாவட்ட செயலாளர் விஷ்ணு கணேஷ் ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் வக்கீல் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வெள்ளியங்கிரிஆண்டவர்கோவில் உள்ளிட்ட, அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களை பாதுகாக்க மலை மீது, மருத்துவக் குழு நியமிக்க வேண்டும்.
'தென்மாநிலங்களில் வசிக்கும் மக்களை, ஆப்பிரிக்கர் போல் கேவலமாக உள்ளனர்; வடநாட்டு மக்கள் வெள்ளையர்கள் போல் உள்ளனர்; கிழக்கே உள்ளவர்கள் சீனர்கள் போல் உள்ளனர்' என்று இனவெறியுடன், நாட்டு மக்களிடையே பிரிவினை தூண்டும் விதமாக பேசிய, காங்.,வெளிநாட்டு தலைவர் சாம் பிட்ரோட்டாவை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தால், பாகிஸ்தான் நம்நாட்டின் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்று, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவை கேவலமாகவும் பேசிய, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை, வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்செயற்குழுவில் கொள்கை பரப்பு செயலாளர் சிவகுரு, மாநகர மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை இணை அமைப்பாளர் ரங்கசாமி மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.