/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் லீக்ஜி.சி.சி.,க்கு வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் லீக்ஜி.சி.சி.,க்கு வெற்றி
ADDED : மே 06, 2024 12:14 AM
கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஜி.சி.சி., அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் ஜி.சி.சி., மற்றும் கே.எப்.சி.சி., அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கே.எப்.சி.சி., அணி வீரர்கள் ஜி.சி.சி.,யின் தினேஷ் குமார் (4 விக்கெட்), கபில் முருகேஷ் (4 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கே.எப்.சி.சி., அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக, அந்த அணி 25 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது.
வெற்றி பெற 97 ரன்கள் தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜி.சி.சி., அணிக்கு சர்வேஷ் கிருஷ்ணாவின் (43*) நிதானமாக ஆட்டம் கைகொடுக்க, அந்த அணி 24 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எப்.சி.சி., சார்பில் சரவணகுமார் நான்கு விக்கெட், செல்வா மூன்று விக்கெட் எடுத்தனர்.