/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
/
தேர்தல் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
தேர்தல் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
தேர்தல் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
ADDED : மார் 26, 2024 11:09 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
* பொள்ளாச்சி அருகே, கோபாலபுரம் சோதனைச்சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது, கேரளாவை சேர்ந்த சைஜீ, 86,700 ரூபாய் பணம், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
* அதே பகுதியில் வாகனத்தில் வந்த கேரளாவை சேர்ந்த அப்சல் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 87 ஆயிரத்து, 100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* நெகமம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், அவ்வழியாக காரில் வந்த கோவை சக்தியந்தன், முறையான ஆவணங்களின்றி, 92,700 ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* அதே பகுதியில் வாகனத்தில் வந்த பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ஜாகீர் உசேன், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 64,040 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தில் வந்த பாலக்காட்டை சேர்ந்த ராஜீத் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 70,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* வடசித்துார் ரோட்டில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது, கோவை ஆர்.எஸ்., புரத்தை சேர்ந்த விஜயகுமார், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* கோாபாலபுரம் சோதனைச்சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில், கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் கபூர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* மற்றொரு வாகனத்தில் வந்த பாலக்காட்டை சேர்ந்த அப்பாஸ், பசீர், ஹக்கீம் ஆகியோர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
உடுமலை
உடுமலை சட்டசபை தொகுதி, பறக்கும் படை அலுவலர் அமீரா ஹமீதா தாஹிரா தலைமையில், எஸ்.எஸ்.ஐ., விஸ்வநாதன், போலீசார் குமுதவல்லி நாச்சியார், சம்பத் ஆகியோர் தலைமையிலான குழுவினர், குடிமங்கலம் - தாராபுரம் ரோடு, ஒட்டமடம் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காரில், கேரள மாநிலம், பாலக்காடு, பிராரியை சேர்ந்த அப்துல்கயூம் கரீம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த, 75,500 ரூபாயை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

