/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறக்கும் படையின் கண்காணிப்பு தீவிரம்: ரூ.6.82 லட்சம் ரூபாய் பறிமுதல்
/
பறக்கும் படையின் கண்காணிப்பு தீவிரம்: ரூ.6.82 லட்சம் ரூபாய் பறிமுதல்
பறக்கும் படையின் கண்காணிப்பு தீவிரம்: ரூ.6.82 லட்சம் ரூபாய் பறிமுதல்
பறக்கும் படையின் கண்காணிப்பு தீவிரம்: ரூ.6.82 லட்சம் ரூபாய் பறிமுதல்
ADDED : மார் 25, 2024 12:12 AM
- நிருபர் குழு -
பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை பகுதியில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த மொத்தம், 6,82,250 ரூபாயினை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி பகுதியில், தேர்தல் விதிமுறை மீறல் தடுக்கும் வகையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், கோபாலபுரம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, திருச்சியை சேர்ந்த சண்முகம், வாழைத்தார் விற்பனை செய்து பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால், முறையான ஆவணங்களின்றி, 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அனுப்பர்பாளையம் அருகே வாகனச்சோதனை மேற்கொண்ட நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகனத்தில் வந்த தாராபுரத்தைச்சேர்ந்த பார்த்திபன், முறையான ஆவணங்களின்றி, ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 250 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதே பகுதி வழியாக மற்றொரு வாகனத்தில் வந்த திருச்சியைச்சேர்ந்த சசிகுமார் முறையான ஆவணங்களின்றி கொண்டுவந்த, 56 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
புளியம்பட்டி அருகே பறக்கும்படை அதிகாரிகள், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், நெகமம் கப்பளாங்கரையை சேர்ந்த தரணிபதி ராஜ்குமார், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வால்பாறை
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை அருகே மீனாட்சிபுரத்தில் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச்சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டனர்.
வாகனத்தில் வந்த குருக்கஞ்சேரி தனபாண்டி, 40, ஆயிரம் ரூபாய், ரகு, 15,000 ரூபாய், வசந்த், 36,000 ரூபாய் என மொத்தம், 91 ஆயிரம் ரூபாய் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.உடுமலை
உடுமலையில், இரு இடங்களில் நடந்த வாகன சோதனையில், 2.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை சட்டசபை தொகுதியில், தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலையான கண்காணிப்பு குழு மோகனரம்யா தலைமையிலான அதிகாரிகள், பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு, ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலை புக்குளத்தைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன், உரிய ஆவணங்கள் இல்லாமல், 53,500 ரூபாய் வாகனத்தில் கொண்டு வந்தார். தேர்தல் விதிமுறை அடிப்படையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டு, உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல், நேற்றுமுன்தினம் அதிகாலை, 2:15 மணியளவில், உடுமலை தொகுதி, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழு-1, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தங்கவேல் என்பவர் விதிமுறை மீறி வாகனத்தில் கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

