/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டசபை தேர்தலுக்கு விஜய் ரசிகர்கள் ஆயத்தம்
/
சட்டசபை தேர்தலுக்கு விஜய் ரசிகர்கள் ஆயத்தம்
ADDED : மே 01, 2024 12:25 AM

கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பஸ் ஸ்டாப்பில், விஜய் சினிமா பிளக்சில் அரசியல் வாசகம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தற்போது பல படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டு வருகிறது. இதில், சில படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருகின்றன. இதில், விஜய் நடிப்பில் வெளிவந்த 'கில்லி' படம் திரையரங்குகளில் மீண்டும் 'ரிலீஸ்' செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் 'கில்லி' பட போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ்கள் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பஸ் ஸ்டாப்பில், வைக்கப்பட்டுள்ள 'கில்லி' பட பிளக்சில், '234 தொகுதியிலும் தலைவர் கில்லி டா' என்றும், '2026 கப்பு முக்கியம் பிகிலு' என்ற அரசியல் கலந்த வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேலும், இதில் கட்சியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி அரசியல் கட்சியினர், மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இதை கவனித்து சென்றனர். விஜய் பட பிளக்ஸ் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.