/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை வசதி இல்லாததால் டோலியில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்
/
சாலை வசதி இல்லாததால் டோலியில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்
சாலை வசதி இல்லாததால் டோலியில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்
சாலை வசதி இல்லாததால் டோலியில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்
ADDED : பிப் 24, 2025 12:43 AM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி மூன்று கிலோ மீட்டர் கிராம மக்கள் துாக்கி சென்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை கிராம ஊராட்சியில், கடம்பன் கோம்பை என்னும் மலைக்கிராமம் உள்ளது.
இங்கு போதிய தார் சாலை வசதி இல்லை, இருக்கும் பாதையும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடம்பன் கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வாயிலாக அவரது உடல் நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கடம்பன் கோம்பை அருகே உள்ள நீராடி பகுதிவரை கொண்டு வரப்பட்டது. அதன் பின் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸால் செல்ல முடியவில்லை. இதையடுத்து, அங்கேயே அவரது உடலை இறக்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்களே டோலி கட்டி உடலை தோளில் சுமந்து எடுத்து சென்றனர்.