/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி குளத்தில் பா.ஜ.,வினர் வினாயகர் சிலை விசர்ஜனம்
/
குறிச்சி குளத்தில் பா.ஜ.,வினர் வினாயகர் சிலை விசர்ஜனம்
குறிச்சி குளத்தில் பா.ஜ.,வினர் வினாயகர் சிலை விசர்ஜனம்
குறிச்சி குளத்தில் பா.ஜ.,வினர் வினாயகர் சிலை விசர்ஜனம்
ADDED : செப் 08, 2024 11:11 PM

போத்தனூர்:போத்தனூர் அருகே சித்தண்ணபுரத்தில் சாமண்ண நகரிலுள்ள செல்வ வினாயகர் கோவிலில். கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மற்றும் குடியிருப்போர் சார்பில், ஒன்பதரை அடி உயர பாலவினாயகர் சிலை நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
22ம் ஆண்டாக நடக்கும் விழாவின் முதல் நாளில், கணபதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன. கோலமிடுதல், விளையாட்டு போட்டிகள் நடந்தன. மதியம் உச்சி கால பூஜை, அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தன.
இரண்டாம் நாளான நேற்று காலை, கணபதி ஹோமம் தொடர்ந்து சிறப்பு பூஜை, கோமாதா பூஜைகள் நடந்தன. இதையடுத்து விசர்ஜன ஊர்வலத்தை, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் துவக்கி வைத்தார். குறிச்சி குளத்தை ஊர்வலம் அடைந்தது.
அங்கு சிறப்பு பூஜைக்குப் பின், சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட துணை தலைவர் முரளி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.