/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன்கொடுமை தடுப்பு வழக்கு; 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
/
வன்கொடுமை தடுப்பு வழக்கு; 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
வன்கொடுமை தடுப்பு வழக்கு; 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
வன்கொடுமை தடுப்பு வழக்கு; 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
ADDED : மார் 13, 2025 05:54 AM
கோவை; வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆறு பேருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், நெகமம் அருகேயுள்ள சுந்தரகவுண்டனுார், அரிஜன காலனியை சேர்ந்தவர் மணி,40. பட்டியல் இனத்தை சேர்ந்த இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராசு என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், 2018 ஜூன், 17ல், அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ராசு,67, இன்பசேகர்,38, கவிமணி,35, கந்தசாமி,85,சந்தோஷ்குமார்,35,சிவக்குமார்,32, ஆகியோருடன் மணி வீட்டிற்கு சென்று, அவரை அடித்து உதைத்து, ஜாதி பெயரை சொல்லி திட்டினர். படுகாயமடைந்த மணி, அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில், நெகமம் போலீசார் விசாரித்து, 6 பேரையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை எஸ்.சி., -எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தலா மூன்றாண்டு சிறை, தலா, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.