/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் நாளை விசர்ஜன ஊர்வலம்; வாகன போக்குவரத்து மாற்றம்
/
வால்பாறையில் நாளை விசர்ஜன ஊர்வலம்; வாகன போக்குவரத்து மாற்றம்
வால்பாறையில் நாளை விசர்ஜன ஊர்வலம்; வாகன போக்குவரத்து மாற்றம்
வால்பாறையில் நாளை விசர்ஜன ஊர்வலம்; வாகன போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 13, 2024 10:33 PM

வால்பாறை : வால்பாறையில் பல்வேறு இடங்களில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 விநாயகர் சிலைகள், நாளை (15ம் தேதி) விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
வால்பாறையில், ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவில் மற்றும் வீடுகளில், 108 விநாயகர் சிலைகள் கடந்த 7ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வால்பாறையில், 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு வார வழிபாட்டிற்கு பின், நாளை (15ம் தேதி) மதியம், 12:00 மணிக்கு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்படுகின்றன.
வால்பாறை நகரில் முக்கிய வீதி வழியாக மதியம், 2:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹிந்துமுன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் சதீஸ், பொதுசெயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
போக்குவரத்தில் மாற்றம்
வால்பாறையில் நாளை (15ம் தேதி) நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, மதியம், 12:00 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளியூர் மற்றும் சோலையாறுடேம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு, பழைய வால்பாறை வழியாக இயக்கப்படும்.
அதே போல் சின்கோனா, முடீஸ், வெள்ளமலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும். அக்காமலை, கருமலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நடுமலை பழைய பேக்டரியிலிருந்தும் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.