/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 27, 2024 01:59 AM
சூலுார்;சூலுாரில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.
சூலுார் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம், மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமையில் சூலுார் பெருமாள் கோவில் திடலில் நடந்தது. மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து பேசினார்.
செப்., 7 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை, சூலுார் ஒன்றிய பகுதிகளில் கொண்டாடுவது என, முடிவு செய்யப்பட்டது. ஒண்டிப்புதூரில் இருந்து சூலுார் ஏரோ வரை மேம்பாலம் கட்டவும் ஹிந்து கோவில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகராஜ், கிருஷ்ணமாச்சாரி, காளிமுத்து, பிரகாஷ், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.