/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு குறுமைய கால்பந்தில் விஸ்வேஸ்வரா 'விஸ்வரூபம்'
/
தெற்கு குறுமைய கால்பந்தில் விஸ்வேஸ்வரா 'விஸ்வரூபம்'
தெற்கு குறுமைய கால்பந்தில் விஸ்வேஸ்வரா 'விஸ்வரூபம்'
தெற்கு குறுமைய கால்பந்தில் விஸ்வேஸ்வரா 'விஸ்வரூபம்'
ADDED : ஆக 14, 2024 08:55 PM

கோவை : தெற்கு குறுமைய அளவிலான மாணவியர் கால்பந்து போட்டியின் மூன்று பிரிவுகளிலும், விஸ்வேஸ்வரா பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், குனியமுத்துார் அரசு பள்ளி சார்பில் நடத்தப்படுகின்றன.
இதன் மாணவியர் கால்பந்து போட்டி, மைலேரிபாளையம் கற்பகம் இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் தெற்கு குறுமையத்துக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
மாணவியருக்கு, 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில், ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா பள்ளி அணி, 14 வயது பிரிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் கே.பி.எம்., பள்ளியையும், 17 வயது பிரிவில் 1 - 0 என்ற கோல் கணக்கில் கே.பி.எம்., பள்ளியையும், 19 வயது பிரிவில் 3 - 0 என்ற கோல் கணக்கில், டி.வி.சேகரன் பள்ளி அணியையும் வீழ்த்தி, மூன்று பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.