/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற விவேகம் மேல்நிலைப்பள்ளி
/
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற விவேகம் மேல்நிலைப்பள்ளி
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற விவேகம் மேல்நிலைப்பள்ளி
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற விவேகம் மேல்நிலைப்பள்ளி
ADDED : மே 16, 2024 05:06 AM
கோவை : சரவணம்பட்டியில் உள்ள விவேகம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில், ராகவர்த்தினி 500 க்கு 496, நேத்ரா 487, மெல்லினா 486 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில், ஏழு பேர் 480க்கு மேலும், 18 பேர் 450க்கு மேலும், 42 பேர் 400க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பிரசன்ன வெங்கடேஷ் 500 க்கு 486, சஞ்சய்பிரணவ் 480, மாணவி தேவிகா ரெஜித் 472 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும், தேர்வெழுதிய மாணவர்களில், 25 சதவீதம் மேர் 450க்கு மேலும், 52 சதவீதம் பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். விவேகம் பள்ளியில், கல்விக்கு இணையாக, விளையாட்டு, மொழித்திறன், மேடைப்பேச்சு, கராத்தே, ஸ்கேட்டிங், களரி அடிமுறை, நடனம், பரதம், ஓவியம் போன்ற எண்ணற்ற இணைப்பாட செயல்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.