/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைப்பழ மிட்டாய் தயாரிக்க தொழில் பயிற்சி
/
வாழைப்பழ மிட்டாய் தயாரிக்க தொழில் பயிற்சி
ADDED : ஆக 27, 2024 01:23 AM
அன்னுார்;வாழையை மதிப்புக்கூட்டி பொருட்கள் தயாரிக்க பிள்ளையப்பம் பாளையத்தில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
பிள்ளையப்பம்பாளையத்தில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின், கிராமப்புற மகளிர் தொழில்நுட்ப பூங்காவில், மத்திய அரசின் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை நிதி உதவியுடன், வாழையை மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி துவங்க உள்ளது.
பயிற்சியில் வாழை மற்றும் சிறுதானியங்கள் மூலம், பிஸ்கட், நூடுல்ஸ், வாழைப்பழ மிட்டாய்கள், காய்கள் பதப்படுத்துதல், உடனடி தயாரிப்பு உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க உரிய உதவியும் செய்து தரப்படும்.
'பயிற்சி தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, மூன்று மாத காலம் நடைபெறும். பயிற்சியில் பங்கேற்க 90037 65656, 80566 65810 என்னும் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்,' என, தொழில் நுட்ப பூங்கா நிர்வாகிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.