/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால்; இருகூர் பள்ளி சாம்பியன்
/
வாலிபால்; இருகூர் பள்ளி சாம்பியன்
ADDED : ஜூலை 11, 2024 11:49 PM

கோவை: பள்ளி மாணவியருக்கு மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில், இருகூர் அரசு பள்ளி அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
விளாங்குறிச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையே, 14ம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா சுழற்கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது. இதில், 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
'நாக் அவுட்' மற்றும் லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியின், நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி, மாணவர் பிரிவில் ஏ.பி.சி., - டி.கே.எஸ்., வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா, அகர்வால் ஆகிய அணிகளும், மாணவியர் பிரிவில், ஏ.பி.சி., ஸ்ரீ தர்மசாஸ்தா, அகர்வால் மற்றும் இருகூர் அரசு பள்ளி ஆகிய அணிகளும் லீக் சுற்றுக்கு முன்னேறின.
லீக் சுற்றுப்போட்டியில், மாணவர் பிரிவில் மூன்று வெற்றிகளுடன் அகர்வால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், இரண்டு வெற்றிகளுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடமும், ஒரு வெற்றியுடன் ஏ.பி.சி., பள்ளி அணி மூன்றாமிடமும் பிடித்தன.
மாணவியர் பிரிவில் இருகூர் அரசு பள்ளி மாணவியர் சிறப்பாக விளையாடி முதலிடமும், ஏ.பி.சி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடமும், அகர்வால் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாமிடமும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காட்டூர் இன்ஸ்பெக்டர் டவுலத் நிஷா பரிசுகளை வழங்கினார்.
விழாவில், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஐயப்ப சேவா சங்க தலைவர் ராமசந்திரன், செயலாளர் விஜயகுமார், பள்ளி தலைவர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் சங்கரநாராயணன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.