ADDED : ஜூன் 16, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
சூலூர்: கண்ணம்பாளையத்தில் வாலிபால் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் எம்.பி.,பாலதண்டாயுதத்தின் 53 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, கண்ணம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடந்தன. 24 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் பங்கேற்றன.
பெண்கள் பிரிவில், கோபிசெட்டி பாளையம் குமுதா பள்ளி அணி முதலிடமும், விவேகம் பள்ளி, அன்னை வைலட் அணி, ஒட்டன்சத்திரம் அணி முறையே அடுத்த மூன்று இடங்களை பெற்றன.
ஆண்கள் பிரிவில் கண்ணம்பாளையம் ஹிஸ்டரி மேக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் இடம் பெற்றது. மாதம்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப், இருகூர் வாலிபால் கிளப், கரும்புக்கடை அணி முறையே அடுத்த மூன்று இடங்களை பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பையும் பரிசு தொகையும் வழங்கப்பட்டன.
