UPDATED : ஜூன் 16, 2026 10:22 PM
ADDED : ஜூன் 16, 2026 10:10 PM
காந்திபுரம்: கிராஸ்கட் ரோட்டிலுள்ள நகைக்கடையில், இருப்பு நகைகளை ஆய்வு செய்த போது, 6 தங்க காயின் காணாமல் போனது தெரியவந்தது. 'சிசிடிவி கேமரா' காட்சிகளை பார்த்த போது, கடந்த 9ம் தேதி கடைக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் திருடியது தெரிந்தது. புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் கண்டக்டருக்கு மிரட்டல்
ராமநாதபுரம்: அரசு போக்குவரத்துகழகத்தில், மகளிர் மட்டும் பேருந்தில் தர்மபுரி, செக்காசமுத்திரம் சித்ரா,32 பணியாற்றி வருகிறார். ராமநாதபுரம் கிட்னி சென்டர் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது , டைமிங் பிரச்னை தொடர்பாக அதே ரூட்டில் வந்த தனியார் பஸ் கண்டக்டர் தகராறில் ஈடுபட்டார். தட்டி கேட்ட சித்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தியேட்டரில் போன் திருடியவர் கைது
சரவணம்பட்டி: காளப்பட்டி பிரிவை சேர்ந்த நவீனா, கே.ஜி.சினிமா தியேட்டரில் படம் பார்த்தார். படம் முடிந்து புறப்பட்ட போது மொபைல் போனை காணவில்லை. புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கையில், பக்கத்து சீட்டில் இருந்து படம் பார்த்த அசாமை சேர்ந்த ஆகாஷ்அகமது,27 திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.
பைக் பறித்த இருவர் கைது
உக்கடம்: கரும்புக்கடை, ஆஷாத்நகரை சேர்ந்த சஞ்சய்,22, அங்குள்ள மைதானத்தில் பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம், ஹவுசிங்யூனிட்டை சேர்ந்த அப்துல்கலாம்,28, சாரமேடு, பாத்திமா நகர் யாஷீர்,25, ஹசன்,23, ஆகியோர், சஞ்சயை மிரட்டி, பல்சர் பைக் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர். புகாரின் பேரில் கரும்புக்கடை போலீசார் விசாரித்து, அப்துல்கலாம், யாஷீரை கைது செய்தனர். ஹசனை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
கோவை: ரயில்வே ஸ்டேஷனில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது பிளாட்பார்மில், சந்தேகத்தின் பேரில் நின்ற மேற்கு வங்கம் ரஞ்சித்தாஸ்,31, ஆரிப் மந்தல்,28, ஆகியோரை பிடித்து சோதனையிட்டனர். 2 கிலோ 300 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தனர். இருவரையும் கைது செய்தனர்.
* ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள மசூதி அருகே கஞ்சா விற்ற, கேரளம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஆனந்து,26 கைது செய்யப்பட்டார். 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
