லீவு எடுக்க புதிய வி:தி தூய்மை பணியாளர்கள் அதிருப்தி
லீவு எடுக்க புதிய வி:தி தூய்மை பணியாளர்கள் அதிருப்தி
UPDATED : ஜூன் 16, 2026 10:33 PM
ADDED : ஜூன் 16, 2026 10:31 PM
கோவை: மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் லீவு எடுக்க புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியில் 2,600க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். வெள்ளலூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகருக்கு வந்து பணியாற்றுகிறார்கள்.
இவர்கள் லீவு தேவைப்பட்டால் சுகாதார ஆய்வாளர் அல்லது மேஸ்திரிக்கு போனில் தொடர்பு கொண்டோ, நேரிலேயோ தெரிவிப்பர். அடுத்தநாள் பணிக்கு செல்லும்போது லீவு ஸ்லிப்பில் கையெழுத்திட்டால் போதும்.
இந்நிலையில், இனி லீவு வேண்டுமென்றால் மண்டல சுகாதார ஆய்வாளர் அல்லது உதவி கமிஷனரிடம் நேரில் அனுமதி வாங்க வேண்டும் என, வாய்மொழியில் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலர் செல்வம் கூறுகிறார்.
அவர் கூறுகையில், ''புதிய விதிகளின்படி அனுமதி பெறவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். சம்பளம் பிடித்தால் பணிக்கொடை பாதிக்கும். ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் மாதம் ஒரு சி.எல். 2 இ.எல். மருத்துவ விடுப்புகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்களிடம் நேரில் சென்று அனுமதி வாங்குவது சாத்தியமில்லை. எங்களுக்கான வருகைப்பதிவை சுகாதார ஆய்வாளர்தான் பராமரிக்கிறார். மாநகராட்சி நிர்வாகம் பழைய நடைமுறையை பின்பற்றி, புதிய உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
