/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரிக்கையாளர்களுக்கான இறகுப்பந்து போட்டி
/
பத்திரிக்கையாளர்களுக்கான இறகுப்பந்து போட்டி
ADDED : ஆக 13, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பத்திரிக்கை துறையில் பணியாற்றுவோருக்கான இறகுப்பந்து போட்டி, கோவையில் வரும் 24ம் தேதி நடக்கிறது.
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சார்பில், பிரஸ் மற்றும் மீடியா நபர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி, வரும் 24ம் தேதி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி பகுதிகளை சேர்ந்த நாளிதழ், தொலைக்காட்சி, எப். எம்., மற்றும் சமூக வலைதள ஊடகங்களில் பணியாற்றுவோர் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு தொடர்பான தகவல்களுக்கு, 96591 61116 என்ற எண்ணில் அழைக்கலாம்.

