/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; ஒருவர் பலி
/
மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; ஒருவர் பலி
மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; ஒருவர் பலி
மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; ஒருவர் பலி
ADDED : ஏப் 15, 2024 01:06 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, மத வழிபாட்டு தலத்தில் மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒருவர் இறந்தார்.
ஆனைமலை தெற்கு தெருவில் மத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. நேற்று வழிபாடு முடிந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.
அந்த உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில், சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடியாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதே பகுதியைச்சேர்ந்த சிவகாமி, 70, என்ற பெண் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.
மேலும், அங்கு மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது நபர்களுக்கு, உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'ஏழு நபர்கள் அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனை மற்றும் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது', என்றனர்.

