/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆட்சி அமைக்கும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' அமர் பிரசாத் ரெட்டி பேச்சு

ADDED : ஏப் 05, 2024 12:26 AM
அன்னுார்:'மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தால் நம் பகுதிக்கு நன்மை கிடைக்கும்,' என அமர் பிரசாத்ரெட்டி அன்னுாரில் பேசினார்.
நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில் தான் பல சாதனைகள் பிரதமர் மோடி தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அண்ணாமலையின், 'என் மண், என் மக்கள்' யாத்திரையால் தமிழகத்தில் பா.ஜ., அமோகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
கோவையில் அண்ணாமலையும், நீலகிரியில் முருகனும் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவது உறுதி.
எனவே ஆட்சிக்கு வரும் கட்சியை சேர்ந்த எம்.பி., நம் தொகுதியில் இருந்தால் நம் தொகுதியில் அதிக வளர்ச்சி பணிகள் செய்ய முடியும். எனவே இங்கு பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, அப்பகுதியில் ரெட்டியார் சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.