/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று ஓட்டுப்பதிவு மறு பயிற்சி
/
இன்று ஓட்டுப்பதிவு மறு பயிற்சி
ADDED : ஏப் 13, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, இன்று (ஏப்., 13) இரண்டாவது மறுபயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவன்று, ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இரண்டாவது மறு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொகுதிக்கு ஒன்று வீதம், 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இப்பயிற்சி மையங்களிலேயே, தேர்தல் பணியில் ஈடுபடும் வேறு மாவட்டத்தில் வாக்காளர்களாக உள்ள, அனைத்து ஓட்டுப்பதிவு அலுவலர்களும் தபால் ஓட்டுகள் செலுத்த, சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

