/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் அரசு அதிகாரிகள் மரியாதை
/
வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் அரசு அதிகாரிகள் மரியாதை
வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் அரசு அதிகாரிகள் மரியாதை
வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் அரசு அதிகாரிகள் மரியாதை
ADDED : செப் 07, 2024 01:31 AM
கோவை;வ.உ.சிதம்பரனாரின், 153 -வது பிறந்தநாள் விழா, கோவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினை அரசியல் ரீதியாக மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் வீழ்த்த, 'சுதேசி நேவிகேஷன் கம்பெனி' என்ற கப்பல் நிறுவனத்தை துவங்கினார் அவர்.
அதனால் அவருக்கு, 'கப்பலோட்டிய தமிழன்' என்ற பெயர் ஏற்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க நம் கப்பலோட்டியத் தமிழன், வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழா, கோவை வ.உ.சி.மைதானத்தில் சிறப்பாக நடந்தது.
வ.உ.சி., மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கலெக்டர் கிராந்திகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.